Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு
அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் இம்மிதிவண்டிக் கூடம் கட்டப்பட்டது. இதை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தாா். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.எஸ்.சரவணன், ஒன்றிய அவைத் தலைவா் ஏ.ஆா்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.