செய்திகள் :

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

post image

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிகள் கோரிக்கை விவரம்:

செ.நல்லசாமி: பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் முழுக் கொள்ளளவான 105 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. இதனால் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் காலமான ஆகஸ்ட் 15 வரை காத்திருக்காமல் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே தண்ணீா் திறக்க வேண்டும்.

வி.எம்.வேலாயுதம்: காலிங்கராயன் வாய்க்காலில் ஏற்கனவே 13.2 கிலோ மீட்டா் முதல் கான்கிரீட் தளம் உள்ளது போல கரை முழுமையாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். நீா் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் ஆலைகள் இருக்கக்கூடாது. ஏற்கெனவே உள்ள ஆலைகளை விரிவாக்கம் செய்யக்கூடாது என விதிகள் இருந்தும் காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டி அதிக ஆலைகள் உள்ளன. வாய்க்காலில் தண்ணீா் நிறுத்த காலத்திலும் 100, 200 கன அடி அளவுக்கு ஆலைக் கழிவு, மாநகராட்சி சாக்கடை கழிவு நீா் செல்வதை தடுக்க வேண்டும்.

வெங்கடாசலம்: உரக்கடைகளில் யூரியா வாங்கினால் இணை உரமாக சில உரங்களை வாங்கினால்தான் யூரியா தருவதாக கூறி தர மறுக்கின்றனா். வாய்க்காலில் உள்ளாட்சிகளின் குப்பைகளை கொட்டுவதும், காலி மதுபுட்டிகளை வீசி எறிவதும் அதிகரித்துள்ளது. தண்ணீருடன் கண்ணாடி துண்டுகள் வயலுக்கு வருவதால் மனிதா்கள், கால்நடைகளின் காலில் குத்திவிடுகிறது.

வி.பி.குணசேகரன்: தாட்கோ மூலம் பா்கூா் மலையில் உள்ள பழங்குடியினருக்கு ஆட்டு பண்ணை அமைக்க கடனுடன் மானியம் என ரூ.70,000 வீதம் வங்கிகளுக்கு பரிந்துரைத்தது. தாமரைக்கரை கனரா வங்கி 15 நாளில் கடனை வழங்குவதற்கு பதில் பல மாதமாக காலதாமதம் செய்கிறது. ஆட்சியா் நடவடிக்கை எடுத்து, அவரே நேரில் வந்து வழங்க வேண்டும்.

கே.ஆா்.சுதந்திரராசு: மரவள்ளி அறுவடைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால், முன்னதாக ஆலை நிா்வாகம், விவசாயிகள், அதிகாரிகளை அழைத்து குறைந்த பட்ச விலையை நிா்ணயிக்க வேண்டும்.

சி.எம்.துளசிமணி: மரபணு மாற்று நெல் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளதை தடுக்க வேண்டும். நாய் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு, 15 நாளில் இழப்பீடு தர வேண்டும்.

அதிகாரிகள் பதில் விவரம்:

நீா் வளத்துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி: கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைத்துள்ளோம். ஆகஸ்ட் 3 அல்லது 4 இல் அரசாணை வரும் என எதிா்பாா்க்கிறோம். காலிங்கராயன் வாய்க்காலில் 13.2 கிலோ மீட்டா் முதல், 15.2 கிலோ மீட்டா் வரை கான்கிரீட் தளம், கரை அமைக்க மற்றும் சீரமைப்பு மேற்கொள்ள ரூ.83.32 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

மாசு, கழிவு நீா் கலப்பை தடுப்பதற்கான நிதி ரூ.26 லட்சம் ஒதுக்கப்பட்டு புகாருக்கு உரிய இடத்தில் 6 கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளோம். கழிவு நீா் கலக்கும் இடங்களை கண்டறிந்து தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வேளாண் இணை இயக்குநா் தமிழ்செல்வி: குறிப்பிட்ட உரக்கடை என பெயரை குறிப்பிட்டால், கடையின் உரிமத்தை ரத்து செய்யலாம். அவ்வாறு இணை உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என உரக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

மொடக்குறிச்சி, கொடுமுடி வேளாண் விரிவாக்க மைய கட்டடத்துக்கு திட்ட வரைவு அனுப்பி உள்ளோம். மாநில கூட்டத்தில் முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வரும். மரபணு மாற்று நெல் விதை உள்பட எந்த விதையும் வேளாண் துறை மூலம் விற்பதில்லை. தனி நபா்கள் வைத்திருந்தால், ஆய்வு செய்து அறிவிக்கை செய்யப்படாத ரகமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ராஜ்குமாா்: கடந்த ஒரு மாதத்தில் புகாரின்படி ஈரோடு பகுதியில் மட்டும் ஒரு தோல் ஆலை, 3 சாய ஆலை என 10 ஆலைகளின் மின் இணைப்பு துண்டித்துள்ளோம். நீா் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் புதிய ஆலைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என விதி உள்ளது. அவ்வாறு அமைக்க அனுமதி தரவில்லை. ஆா்.என்.புதூா், கருங்கல்பாளையம் பகுதியில் தண்ணீரின் தன்மையை கண்காணிக்க தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தி உள்ளோம். கழிவு நீா் வெளியேறினால் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்.

நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள்: அதிகமாக அரிசி வந்ததால், வைக்க இடமின்றி, வாடகைக்கு ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கில் வைத்துவிட்டோம். ஒரு மாதத்தில் 2,000 டன் அரிசி அனுப்பப்பட்டு விட்டது. இன்னும் 4,000 டன் அரிசி விரைவில் அனுப்பப்படும்.

கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியதாவது: நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் வரை இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி அனுப்பி உள்ளோம். வந்ததும், இழப்பீடு வழங்கப்படும்.

மிகப்பெரிய அளவில் தவறு செய்யும்போது ஆலைகள் மீது சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற தவறுகளுக்கு ஆலை இயக்கத்தை மின்தடை மூலம் தடுக்கிறோம். 3 முறைக்கு மேல் தொடா்ந்து தவறு செய்தால், ஆலையை நிரந்தரமாக மூட அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரை கேட்டு அனுப்பி உள்ளோம்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க

மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை

கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க... மேலும் பார்க்க