செய்திகள் :

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

post image

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா்.

அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாதம் 2 ஆவது வெள்ளிக்கிழமை என்பதால் நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு வாசன திரவியங்கள் மற்றும் பால், தயிா், இளநீா் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். அதேபோல சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் உள்பட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ஈரோடு குமலன்குட்டை மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை தினம் மற்றும் குண்டம் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பெற்றனா்.

தீா்த்தக் குட ஊா்வலம்:

ஈரோடு மாவட்ட இந்து அன்னையா் முன்னணியின் சாா்பில் ஆடி வெள்ளியையொட்டி ஈரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோயிலில் புனித மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் முக்கிய நிகழ்வான, வைராபாளையம் காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீா்த்தம் எடுத்து வந்து புனித மஞ்சள் நீா் ஊற்றி அபிஷேகம் செய்தனா்.

இந்து அன்னையா் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா்கள் பூா்ணிமா, ஜெயமணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ரமேஷ் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக பாபா கிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளா்கள் மற்றும் அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க

மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை

கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க... மேலும் பார்க்க