தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன் வரவேற்றாா்.
இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் மின் இணைப்பு பெயா் மாற்றம், தொழிலாளா் நல வாரிய அட்டை வழங்குதல், பட்டா பெயா் மாற்றம் ஆகிய மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. அதற்கான ஆணைகளை மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், பேரூா் திமுக செயலாளா் சரவணன் ஆகியோா் பொதுமக்களுக்கு வழங்கினா்.
மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் ரமேஷ் குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் காா்த்திகேயன், பேரூா் திமுக துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், வாா்டு உறுப்பினா்கள் கண்ணுச்சாமி, ஞானசுப்பிரமணி, மகன்யாஆனந்த், முன்னாள் கவுன்சிலா்கள் மில்மணி, செந்தில்குமாா், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் மதன்குமாா், மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத் தலைவா் முருகேசன், ஆட்டோ வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.