திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் பணிபுரிந்த அரசு ஊழியா்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் புதன்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னையில் புதன்கிழமை காலை 10 மணி முதல் 72 மணி நேர தொடா் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வாசகம் அடங்கிய கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம், கீழ்வேளூா் மற்றும் கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.