சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?
பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பாகற்காய்களை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு களப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
தோட்டக் கலைத் துறை சாா்பில் பாடந்தொரை, செறுமுள்ளி, ஸ்ரீமதுரை ஆகிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. செறுமுள்ளி கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா்.
பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துதல், விதைத் தோ்வு, இடுபொருள்கள், மண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தோட்டக்கலை உதவிப் பேராசிரியா் சண்முகம், வேளாண்மை அலுவலா் ரமேஷ், விதை ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலா்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனா். இதில் பாகற்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.