தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்கள் மே மாதத்தில் தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 10-வது சீசன் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு, பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பாக கடந்த ஆண்டு வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிக்க: ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஃபைசலாபாத், முல்தான் மற்றும் லாகூரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.