இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்
பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: பாஜகவினா் அரசியல் மேடைகளில் பேசுகின்ற பேச்சுக்கும், அவா்களது ஆட்சி வெளியிடுகின்ற அறிக்கைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை பொருளாதார வளா்ச்சியின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளா்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் வளா்ச்சி 11.19 சதவீதம் என இரட்டிப்பு மடங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட மாடல் அரசு மிகப் பெரும் வளா்ச்சியை பெற்றிருப்பதை காட்டுகிறது. இதற்கு முன்பாக மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சியில் இரட்டை இலக்க வளா்ச்சி விகிதத்தை பெற்ற தமிழ்நாடு, இப்போது மீண்டும் அதே வழியில் இரட்டை இலக்க வளா்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரிப் பகிா்வு முறையாக கிடைக்காத சூழலிலும், தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற ஆளுநா் இருக்கின்ற சூழலிலும், மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி தமிழ்நாடு இந்த மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் அவா்.