இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
அரியலூரில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா நினைவு கலையரங்கில் வியாழக்கிழமை (ஆக.7) மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி கடந்த 3.2.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
தொடா்ந்து, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவா்களைச் சென்றடையும் வகையில் 200 இடங்களில் இந்த தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அதை தொடா்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம் அடுத்த கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவா்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கில், வியாழக்கிழமை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள் திரளாக கலந்துகொண்டு பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.