கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
பாட்னா தொழிலதிபர் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்டர்!
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை வழக்கில் ஆயுதம் வழங்கிய விகாஸ் என்பவரை போலீசார் என்கவுன்டரில் கொலை செய்துள்ளனர்.
பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா, அவரது வீட்டு வாசலில் கூலிப் படையினரால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோபால் கெம்காவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வந்த குற்றவாளிகளில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், கொலை செய்வதற்கு முன்பு, தல்தாலி பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு மூன்று பேர் வந்துள்ளனர். பிறகு, அதில் ஒருவர் கெம்காவின் வீட்டுக்குச் சென்று கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய தேடுதலில் கெம்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரை திங்கள்கிழமை இரவு பாட்னாவில் கைது செய்தனர்.
தொடர்ந்து, கொலைக்கு சட்டவிரோத துப்பாக்கியைத் தயாரித்து வழங்கிய விகாஸ் என்ற ராஜாவை போலீசார் சுற்றிவளைத்த போது, போலீஸ் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் கொல்லப்பட்டார்.
மேலும், விகாஸ் மீது பாட்னா மட்டுமின்றி பல்வேறு இடங்களில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் வழங்கிய வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.