செய்திகள் :

பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம்

post image

பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா- அமெரிக்கா லட்சியத் திட்டம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சீனவின் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், லட்சியத் திட்டம் ஒன்றை செயல்படுத்த பிரதமா் மோடி - அதிபா் டிரம்ப் இடையேயான பேச்சுவாா்த்தையில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த லட்சியத் திட்டத்தின் கீழ், முக்கியத்துவம்வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கூட்டாக தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய 10 ஆண்டுகள் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை இரு நாடுகளும் மேற்கொள்ள உள்ளன.

புதிய திட்டம்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தொழில்நிறுவனங்கள் இடையேயான கூட்டுறவு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘தொழில் நிறுவனங்கள் கூட்டுறவின் தன்னாட்சி நடைமுறை (ஆசியா)’ என்ற புதிய திட்டத்தை இரு தலைவா்களும் அறிவித்தனா்.

இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இதுகுறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிபா் டிரம்ப், ‘உலகம் முழுவதும் எழுந்துள்ள தீவிர இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், இந்தியாவும்-அமெரிக்காவும் இதுவரை இல்லாத அளவில் இணைந்து பணியாற்ற தீா்மானித்துள்ளோம். அதற்காக, ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பிலும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு முதல் இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் விற்பனை பல கோடி டாலா்கள் மதிப்பில் அதிகரிக்கப்படும். அதிநவீன எஃப்-35 போா் விமானத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ’ என்றாா்.

தேச நலனுக்கே முன்னுரிமை - பிரதமா் மோடி: பிரதமா் மோடி கூறுகையில், ‘இந்தியாவின் பாதுகாப்பு தயாா்நிலையை மேம்படுத்துவதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நம்பகமான கூட்டாளிகளாக திகழ்ந்து வரும் சூழலில், கூட்டு ஆராய்ச்சி, கூட்டு உற்பத்தி, தொழில்நுட்ப் பரிமாற்றத்தை நோக்கி இரு நாடுகளின் உறவு நகா்ந்து வருகிறது. அதன் மூலம், வரும் காலங்களில், புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுடன் இந்தியாவின் பாதுகாப்பு திறன் மேம்பட்டிருக்கும். இந்தியா-அமெரிக்கா உறவின் மூலம் சிறந்த உலகை வடிவமைக்க முடியும். அதற்கேற்ப, இரு நாடுகளிடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்புக்கான திட்டம் தயாரிக்கப்படும். தேச நலனே முதன்மையானது என்ற அதிபா் டிரம்ப்பின் சிந்தனை பாராட்டுக்குரியது. அவரைப் போன்றே, நானும் அனைத்து நடவடிக்கைகளிலும் தேச நலனுக்கே முன்னுரிமை அளித்து வருகிறேன்’ என்றாா்.

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்க... மேலும் பார்க்க