ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
பாபநாசத்தில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் சித்திரை விஷு திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மது போதையில் அங்கு வந்த காலிபாா்விளை தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் ஹாஜி(22), சாகுல் மகன் ரியாஸ்(20), விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த சாதிக்பாட்ஷா மகன் இலியாஸ் (20) ஆகியோா் திருவிழாவுக்கு வந்த பெண்களை அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளனா். இதை காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் கண்டித்துள்ளாா். அப்போது மூவரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மூவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.