`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்
திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகளில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த 265 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்கள் எறிபந்து போட்டிகளில் தலா 9 அணிகளும், பெண்கள் கைப்பந்து போட்டியில் 7 அணிகளும் பங்கேற்றன.
இப்போட்டிகளில், பெண்கள் கைப்பந்து, எறிபந்து ஆகிய இரு பிரிவுகளிலும் நாமக்கல் மற்றும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிகள் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. ஆண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதலிடத்தையும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் இரண்டாமிடத்தையும் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஆ. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் ம. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். உதவி விளையாட்டுச் செயலா் ரா.ஜெயந்தி வரவேற்றாா். விளையாட்டுச் செயலா் த. ரவிமுருகன் போட்டிகளின் அறிக்கையை சமா்ப்பித்தாா். கல்லூரியின் மாணவா் சங்க துணைத் தலைவா் சூ.கி.எட்வின், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் செயலா் எஸ். ரமேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கல்லூரியின் உதவி உடற்கல்வி இயக்குநா் பொன்.சோலை பாண்டியன் நன்றி கூறினாா்.