பாமக பொறுப்பாளா்கள் ஆய்வுக் கூட்டம்
கீழ்பென்னாத்தூா், நாரியமங்கலம் பகுதிகளில் ஒன்றிய, நகர பாமக பொறுப்பாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் அடுத்த நாரியமங்கலம் பகுதியில் கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பாமக செயலா் அன்பழகன் தலைமையிலும், கீழ்பென்னாத்தூரில் நகரச் செயலா் தமிழ்மணி தலைமையிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
கூட்டத்தில், பாமகவின் தோ்தல் பணிக் குழுத் தலைவரும், பேராசிரியருமான மீ.கா.செல்வகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
இதில், மாநில இளைஞா் சங்கச் செயலா் பாலயோகி, பசுமை தாயகம் அமைப்பின் மாநில இணைச் செயலா் எஸ்.கே.சங்கா், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.