கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
பாமாயில் என்ன விஷமா? உண்மைக்கு மாறான பொய் விளம்பரங்கள்!
பாமாயில் இல்லை என்ற லேபிள்கள், தற்போது பல்வேறு உணவுப் பொருள்களிலும் இடம்பெறுவது அதிகரித்துள்ளது. ஆனால், இது பாமாயில் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறதே தவிர, உண்மையில்லை. விளம்பர தந்திரம். அவ்வளவே.
இதனை இந்திய உணவுப்பொருள் மற்றும் குளிர்பான அமைப்பு தெரிவித்திருப்பதோடு, பாமாயில் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்திவரும் இதுபோன்ற விளம்பரங்கள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறது.
உணவுப்பொருளில் பாமாயில் இல்லை என்று சொல்வது அறிவியல்பூர்வமான உடல்நலக் குறிப்பு இல்லை, வெறும் வியாபார தந்திரம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.