பாலக்காடு, செங்கோட்டை ரயில்கள் வழித்தட மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு, செங்கோட்டை ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆம் தேதிகளில் கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு ரயில் நிலையங்களைத் தவிா்த்து போதனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.
பூங்குடி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 9 ஆம் தேதி கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் கூடுதலாக நிறுத்தப்படும்.
கன்னியாகுமரி - சாா்லப்பள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) வரும் 9 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.