அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி
துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மே 2 ஆம் தேதி அரசு நகரப் பேருந்தில் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, சமயபுரம் தனியாா் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் செ. நடராஜிடம் விசாரிக்கின்றனா்.