சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு
பொறியியல் பணிகள்: கரூா், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக கரூா், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் வரும் 13 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திருச்சி பயணிகள் ரயில்கள் (76810, 76809), ஈரோடு - திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில்கள் (56810, 56105), சேலம் - மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயில்கள் (16811, 16812) வரும் 13 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதியாக ரத்து: ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 13 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஈரோடு - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 13 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு டவுன் - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
வழித்தட மாற்றம்...: காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) வரும் 13 ஆம் தேதி திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூா் வழியாக இயக்கப்படும்.
மைசூா் விரைவு ரயிலானது (16231) வரும் 13 ஆம் தேதி திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூா் வழியாக இக்கப்படும்.