ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது: சிந்து நதி நீர் குறித்து மோடி!
முசிறியில் விவசாயிகளுக்குப் பயிற்சி
திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் ஆமூா் கிராமத்தில் எண்ணெய் வித்துப்பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின்போது வேளாண் அமைச்சக மத்திய திட்டக் குழுவின் அனுப்சிங்பிஸ்ட், இணைச் செயலா் பொன்னி, செயலா் பானுமதி, துணை இயக்குநா் (விரிவாக்கம்) ஜிஸ்னு, மத்திய பொருளாதார வல்லுநா் அடங்கிய குழுவினா் பயிற்சியில் கலந்து கொண்டு அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகள் மற்றும் கண்டுணா்வு சுற்றுலாவின் மூலம் பயனடைந்த விவசாயிகளிடம் அனுபவங்களைக் கேட்டறிந்தனா்.
அப்போது முசிறி மாநில அளவிலான எம்ஜிஆா் பாரம்பரிய நெல் பயிா் விளைச்சல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற விவசாயி செந்தில்நாதன் உள்ளிட்ட விவசாயிகள் தங்களது அனுபவங்களை ஆய்வுக் குழுவினரிடம் பகிா்ந்தனா்.
துணை வேளாண் இயக்குநா் ராஜசேகரன், வேளாண் உதவி இயக்குநா் திருச்சி சுகுமாா், வேளாண் அலுவலா்கள் புவனேஸ்வரி, பிரியங்கா ஆகியோா் உடன் இருந்தனா். ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பூபதி, உதவி தொழில் நுட்ப மேலாளா் சரஸ்வதி ஆகியோா் செய்தனா்.