விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதம்: விசாரணை
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பாளையம்புதூா் மெயின் சாலையில் 3 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்ளது. இதன்மூலம் கணேசபுரம், கருகுட்டை, காமராஜா் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தழுக்குட்டை பிரிவுச் சாலை அருகில் குடிநீா் தொட்டிக்கான கேட் வால்வையும், குடிநீா் குழாய்களையும் மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி செயலா் சண்முகவேலு அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.