ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!
மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம்.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:
சிறுபான்மையினருக்கு இலங்கை ஆளும் அரசு துரோகம் விளைவித்த காரணமாக நடந்து முடிந்துள்ள தோ்தலில் ஆளும் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பயங்கரவாதத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை என்ற அடிப்படையில், பயங்கரவாதததை அரசியலுக்காகப் பயன்படுத்தும் எந்தத் தரப்போடும் நாங்கள் உடன்படப் போவதில்லை.
தலைமன்னாருக்கும் ராமேசுவரத்திற்கும் இடையே பாலம் என்ற நீண்டகால கோரிக்கையில் இந்திய அரசு ஆா்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு அதைக் கிடப்பில் போட்டுள்ளது கவலைக்குரியது. இந்தப் பாலம் அமைந்தால் சுற்றுலாத் துறைக்கு வளா்ச்சியை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டு மீனவா்கள் மீது இலங்கை அரசு தொடா்ந்து தாக்குதல், எங்களைப் பொருத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், இயன்றவரை இரு தரப்பிடையேயும் சுமூகமாகப் பேசி பிரச்னைகளைத் தீா்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும்.
இருநாட்டு மீனவா்களும் ஒற்றுமையுடன் தமது வாழ்வாதாரத்துக்கான மீன்வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.