ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் த. ஜெயகுமாா் கூறியது:
இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனா். இங்கு பிஏ தமிழ் , பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம், பிசிஏ கணினி பயன்பாட்டியல், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி நுண் உயிரியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தம் 600 சோ்க்கை இடங்கள் உள்ளன. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரி மூலமாகப் பதியலாம்.
இந்தக் கல்லூரியின் சோ்க்கைக்கான கவுன்சிலிங் எண். 10 61 011 ஆகும். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரிக்கு வந்தும் பதியலாம். மேலும் விவரங்களுக்கு 94422 19869, 88702 84156.
கல்லூரிக்கு சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் அசல், நகல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் செல்ல இலவச பஸ் பாஸ் வசதி, அரசு கல்வி உதவித்தொகை மற்றும் பெறும் வசதியும் உள்ளது. ,நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலம் மாதம் ரூ. 1000 அரசு உதவித்தொகை பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.