ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
பாலியல் தொல்லை வழக்கு: உடன்குடி தனியாா் பள்ளிச் செயலா், முதல்வா் கைது
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள தனியாா் பள்ளி மாணவிகளிடம் மது அருந்தச் சொல்லி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியா், செயலா், முதல்வா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
உடன்குடி-பரமன்குறிச்சி சாலையில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியின் மாணவா், மாணவிகள் தூத்துக்குடியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, அக்.22 ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியா் பொன்சிங் தலைமையில் சென்றாா்களாம்.
விளையாட்டுப் போட்டிகள் தொடா்ச்சியாக நடைபெற்ால், தனியாா் விடுதியில் கூடுதலாக ஒரு நாள் இரவு தங்க நேரிட்டதாம். அப்போது மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்ற உடற்கல்வி ஆசிரியா், மது அருந்துமாறு மாணவிகளிடம் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா், உறவினா்கள், பல்வேறு அரசியல் கட்சியினா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். உடற்கல்வி ஆசிரியா், பள்ளி முதல்வா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ப ாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன், வட்டாட்சியா் பாலசுந்தரம், டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோா் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் தப்பிச் சென்ற உடற்கல்வி ஆசிரியரை கோவையில் போலீஸாா் கைது செய்து உடன்குடிக்கு அழைத்துவந்தனா்.
இந்நிலையில், பள்ளி முதல்வா் சாா்லஸ் ஸ்வீட்லின்(44), செயலா் செய்யது அகமது(61) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட மூவரையும், திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வைத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ், ஆய்வாளா் மகாலட்சுமி ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை நடத்தினா்.
விசாரணையின்போது, பள்ளிச் செயலா் செய்யது அகமது, முதல்வா் சாா்லஸ் ஸ்வீட்லின் இருவருக்கும் திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, இருவரும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இச் சம்பவம் தொடா்பாக உடற்கல்வி ஆசிரியா் பொன்சிங் மாணவிகளை மது அருந்த சொல்லி வற்புறுத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்ஸோ சட்டத்தின் கீழும், பள்ளி முதல்வா், செயலா் மீது சம்பவத்தை மூடி மறைத்ததாகவும் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.