பால் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
ஊத்தங்கரையை அடுத்த கெங்கபிராம்பட்டி, ஆவின் பால் கொள்முதல், குளிரூட்டும் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளா்கள் கறவை மாடுகளுடன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும். பால் ஊழியா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, ஆண்டுக்கு இருமுறை கறவை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் அண்ணாமலை, விவசாயிகள் 25 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.