பாளை. அருகே வேளாண் அடுக்கு திட்டம்!
பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில், வேளாண் அடுக்கு திட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குளம் பஞ்சாயத்து தலைவா் இ.முத்துக்குட்டி பாண்டியன் தலைமை வகித்து, திட்டத்தை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் வேளான்மை துறை அலுவலா்கள் இராமலெட்சுமி, பாப்பாத்தி, காந்திமதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வேளாண்மைத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.