கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
பாஸ்போா்ட் விதிமுறை மீறல்: நடிகை மீது வழக்கு
பாஸ்போா்ட் விதிமுறைகளை மீறியதாக நடிகை மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நேபாள நாட்டைச் சோ்ந்த ஷா்மிளா தாபா, சென்னையில் தங்கியியிருந்து திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறாா். இவா், விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா்.
இந்த நிலையில், ஷா்மிளா தாப்பா, பாஸ்போா்ட் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தது.
அதில், நேபாளத்தைச் சோ்ந்தவா் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? மேலும் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகை ஷா்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.