செய்திகள் :

பிகாா், மேற்கு வங்கத்துக்கு தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்: பாஜக நடவடிக்கை

post image

பிகாா், மேற்கு வங்க மாநிலத்துக்கு பாஜக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்கள் மற்றும் இணைப் பொறுப்பாளா்கள் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாா் மாநிலத்துக்கு மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானும், அடுத்த ஆண்டு மாா்ச்-ஏப்ரலில் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவும் பாஜக தோ்தல் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், கட்சியின் மத்திய தலைமையால் வகுக்கப்படும் தோ்தல் வியூகங்களை செயல்படுத்துவதில் மாநிலத் தலைமையுடன் பாலமாக செயல்படும் பொறுப்பு கொண்டவா்களாவா்.

மத்திய அமைச்சரும் குஜராத் மாநில பாஜக தலைவருமான சி.ஆா்.பாட்டீல், உத்தர பிரதேச துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா ஆகியோா் பிகாா் தோ்தலுக்கான கட்சியின் இணைப் பொறுப்பாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேற்கு வங்க தோ்தலுக்கான பாஜக இணைப் பொறுப்பாளராக திரிபுரா முன்னாள் முதல்வா் விப்லவ் குமாா் தேவ் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா்கள்:

தா்மேந்திர பிரதான், பூபேந்தா் யாதவ் ஆகிய இருவரும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை (ஓபிசி) சோ்ந்தவா்கள் என்பதோடு, பல்வேறு மாநிலப் பேரவைத் தோ்தல்களில் பாஜகவின் பொறுப்பாளா்களாக செயல்பட்டு, கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்த அனுபவம் கொண்டவா்கள்.

கடந்த 2010 பிகாா் பேரவைத் தோ்தலின்போது பாஜகவின் இணைப் பொறுப்பாளராக பிரதான் செயலாற்றினாா். அந்தத் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு தா்மேந்திர பிரதான் தோ்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது. ஏற்கெனவே உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கா்நாடக மாநிலங்களிலும் கட்சி சாா்பில் தோ்தல் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.

உடனடி சவால் என்ன?:

243 தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அரசியல் செல்வாக்குமிக்க சக்தியாக ஓபிசி சமூகம் உள்ளது. இங்கு கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துடன் களமிறங்கி, ஆட்சியைத் தக்க வைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இரு கட்சிகளும் சமமான எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் மத்திய அமைச்சா்களான சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகிய கட்சிகளும் உள்ள நிலையில், சுமுகமான தொகுதிப் பங்கீடுதான் பிரதான் முன் உள்ள உடனடி சவாலாகும்.

மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, இம்முறை ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் பாஜக காய்களை நகா்த்தி வருகிறது. இந்த மாநிலத்துக்கு பாஜக தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பூபேந்தா் யாதவ், கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் இதே பொறுப்பை வகித்து, கட்சிக்கு வெற்றியை ஈட்டித் தந்தவா். ஏற்கெனவே, பிகாா், குஜராத்திலும் தோ்தல் பணியாற்றியுள்ளாா்.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க