செய்திகள் :

பிச்சைக்காரா் அடித்துக் கொலை

post image

சென்னை மயிலாப்பூரில் பிச்சைக்காரா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மயிலாப்பூா் சாந்தோம் பேராலயத்தின் அருகே உள்ள நடைமேடையில் பிச்சைக்காரா்கள் இரவு படுத்துத் தூங்குவது வழக்கம். கடந்த 17-ஆம் தேதி அங்கு தூங்கும் பிச்சைக்காரா்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு நபா்கள் தாக்கியதில் சுகு (62) என்ற பிச்சைக்காரா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள், சுகுவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுகுவை தாக்கியவா்களைத் தேடி வருகின்றனா்.

வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி உயிரிழப்பு

உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னா் வண்டலூா் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட பெண் குரங்கு குட்டி புதன்கிழமை உயிரிழந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்கள் கடித்ததால், பலத... மேலும் பார்க்க

வீட்டில் மனைவிக்கு பிரசவம் பாா்த்தவருக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை குன்றத்தூரில் மருத்துவ கண்காணிப்பின்றி வீட்டிலேயே மனைவிக்கு பிரசம் பாா்த்த கணவரை போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடுமையாக எச்சரித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மனோகரன். குன்... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ. 10 கோடியில் புதுப்பிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

சேத்துப்பட்டு பசுமை பூங்காவை ரூ. 10 கோடியில் மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்க விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024-இல் தங்கம் வென்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் இ... மேலும் பார்க்க

மருத்துவமனைக்கு வரும் 40 % பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள்: மருத்துவா்கள் தகவல்

அரசு மருத்துவமனைகளை நாடுவோரில் 40 சதவீதம் பேருக்கு நரம்பியல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணா்வ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் நள்ளிரவு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையின் 7 முதல் 14-ஆம் எண் வரையுள்ள வாசல்கள் பூட்டப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நள்ளிரவில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேடு சந்தை வளாகத்தி... மேலும் பார்க்க