செய்திகள் :

பிரதமா் மோடி டிச. 21-இல் குவைத் பயணம்: 43 ஆண்டுகளில் முதல் முறை

post image

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) வளைகுடா நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஒருவா் குவைத் செல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த மாதத்திலேயே சவூதி அரேபியாவுக்கும் பிரதமா் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இரு நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு தேதியை முடிவு செய்வதில் சிக்கல் இருந்ததால், பிரதமரின் சவூதி அரேபிய பயணம் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் செய்யும் நாடுகளில் முக்கியமானதாக குவைத் திகழ்கிறது. லட்சக்கணக்கான இந்தியா்களும் குவைத்தில் பணியாற்றி வருகின்றனா். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமா் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தாா். இப்போது குவைத்துக்கும் அவா் செல்ல இருக்கிறாா்.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் குவைத் இப்போது வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குவைத் வெளியுறவு அமைச்சா் அப்துல்லா அலி அல்-யாஹ்யா இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்தாா். அப்போது, குவைத்துக்கு வர வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

முன்னதாக, நியூயாா்க்கில் கடந்த செம்டம்பா் மாதம் குவைத் பட்டத்து இளவரசா் ஷேக் ஷாபா காலித் அல் அகமது அல் ஷாபாவை மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாட்டு உறவு தொடா்ந்து மேம்பட்டு வருவது குறித்து இரு தலைவா்களும் திருப்தி தெரிவித்தனா்.

குவைத் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே வா்த்தகம், முதலீடு, கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாசார உறவை மேம்படுத்த கூட்டுக் குழுக்கள் அமைப்பது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் வெளியுறவு அமைச்சக நிலையில் கையொப்பமாயின. பிரதமரின் பயணத்தின்போது இந்த ஒப்பந்தங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிகிறது.

அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்

நமது சிறப்பு நிருபர்அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் க... மேலும் பார்க்க

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

நமது நிருபர்செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.இது தொடர்பாக மக்க... மேலும் பார்க்க

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.மக்களவை, ... மேலும் பார்க்க

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அ... மேலும் பார்க்க