கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
பிரைன் லாராவுக்காக உலக சாதனையை விட்டுக்கொடுத்த வியான் முல்டர்..! குவியும் வாழ்த்துகள்!
தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் டெஸ்ட்டில் பிரைன் லாராவின் உலக சாதனையை முறியடிக்காமல் விட்டுக்கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது, கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் ஜூலை 6-இல் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 626/5 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 334 பந்துகளில் 367* ரன்கள் எடுத்திருந்தார். பிரைன் லாராவின் 400* சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டிக்ளேர் செய்தது அதிர்ச்சியாகவிருந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் வியான் முல்டர் பேசியதாவது:
பிரைன் லாரா ஒரு லெஜெண்ட். அவர் 400 ரன்களோ 401 ரன்களோ இங்கிலாந்துக்கு எதிராக அடித்தார். அவர் இருந்த உயரத்துக்கு அவரது சாதனை அப்படியே இருப்பதுதான் சிறப்பானது.
எனக்கு மீண்டும் 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் இதையேதான் செய்வேன்.
இந்த முடிவுக்கு எனது பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்டும் சம்மதித்தார். ’லெஜெண்டின் சாதனை அவரிடமே இருக்கட்டும். என்னுடைய விதி நான் என்னாகுவேன் எனத் தெரியாது. ஆனால், பிரைன் லாராவின் சாதனை அவரிடமே இருக்க விடுவதுதான் நல்லது’ எனப் பயிற்சியாளரும் கூறியதாக வியான் முல்டர் கூறினார்.