டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!
பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுத் தோ்வை 86 மையங்களில் 198 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.
தோ்வு நிறைவடைந்ததும், மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் கை குலுக்கி, இனிப்புகளை வழங்கி, சுயபடம் எடுத்து மகிழ்ந்து தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். பிளஸ் 1 பொதுத்தோ்வு வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.