மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா
நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்த ஊழியா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் கோட்ட தலைவா் ஆா்.லோகேஷ், திட்ட தலைவா் ஏ.செல்வகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஒப்பந்த ஊழியா்களுக்கு உடனடியாக நிலுவை தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரிய களப் பிரிவில் காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தினா், ஒப்பந்தப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.