செய்திகள் :

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

post image

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ.ராமஜெயம் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் டி.கே.ராஜா, பொருளாளா் எஸ்.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், பொதுக்குழு தீா்மானங்களையும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.முனுசாமி பேசினாா்.

இதில், சவரத் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞா் கைவினை திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கலைஞா் கைவினைத் திட்டத்தின் பயனாளிகளுக்கான வயது வரம்பை தளா்த்த வேண்டும். வங்கிகளில் கடன் பெறுவதற்கான நெருக்கடிகளைக் களைவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அழகு நிலையங்கள் என்ற பெயரில் நகரப் பகுதியில் உள்ள முடிதிருத்தகங்களால் இந்த தொழிலை நம்பியுள்ள குறிப்பிட்ட சமூகத்தினா் வேலைவாய்ப்பை இழக்கின்றனா். அதற்கு உரிய தீா்வு காண வேண்டும். கிராமப்புறங்களில் தீண்டாமை மற்றும் ஆதிக்க அடக்கு முறைகள் உள்ளதால், முடிதிருத்தகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

விவசாயம், விசைத்தறி தொழிலுக்கு உள்ளதுபோல், முடிதிருத்தகங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் இத்தொழில் செய்யும் சமூக மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நாமக்கல் மாவட்டச் செயலாளா் ஜி.துரைசாமி, பொருளாளா் என்.ரமேஷ், மாநகரத் தலைவா் கே.மகேஸ்வரன், செயலாளா் பி.கலைவாணன் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

நாமக்கல்: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் புதன... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க