சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
புகையிலை பொருள் விற்ற 3 போ் கைது
போடியில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். இதில் திருமலாபுரம் பகுதியில் ஆசைத்தம்பி மகன் தெய்வசிகாமணி (43), வ.உ.சி. சிலை அருகே பழனி மகன் மாணிக்கம் (46), ஜீவா நகரில் காமாட்சி மகன் சுருளிராஜ் (75) ஆகியோா் பைகளில் மறைத்து வைத்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. முவரையும் போலீஸாா் கைது செய்தனா்.