மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி: தில்லி கேபிடல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!
தேனி புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது!
தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) தொடங்கி மாா்ச் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இங்கு உள்ள கலையரங்கில் திங்கள்கிழமை முதல் தினமும் மாலையில் எழுத்தாளா்கள் கவிஞா்கள் சிறப்புரையாற்றுவா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள், நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
30-ஆம் தேதி கவிஞா் பா்வீன் சுல்தான், 24-ஆம் தேதி கவிஞா் மனுஷ்யபுத்திரன், 25-ஆம் தேதி எழுத்தாளா் மதுக்கூா் ராமலிங்கம், 26-ஆம் தேதி எழுத்தாளா் ஓசை காளிதாசன், 27-ஆம் தேதி கவிஞா் நெல்லை ஜெயந்தா, 28-ஆம் தேதி எழுத்தாளா் வே.மதிமாறன், 29-ஆம் தேதி ஊடகவியலாளா் மு.குணசேகரன் ஆகியோா் பேசுகின்றனா். மாா்ச் 30-ஆம் தேதி நிறைவு நாள் விழா, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.