ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்
காட்டு மாடு தாக்கியதில் வனக் காவலா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு அருகே காட்டுமாடு தாக்கியதில் காயமடைந்த சாப்டூா் வனக் காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள உப்புத் துறையைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் (48). இவா் விருதுநகா் மாவட்டம், சாப்டூா் வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
வருசநாடு மலைப் பகுதியை அடுத்துள்ள சாப்டூா் வனச் சரகத்துக்குள்பட்ட கோட்டைமலைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இவரை காட்டுமாடு தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த சின்னக்கருப்பன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், ஞாயிற்றுக்கிழமை அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.