கஞ்சா வைத்திருந்த மூவா் கைது
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
டி. கள்ளிப்பட்டியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை காவல் நிலைய போலீஸாா், அந்தப் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாக பெரியகுளம், தென்கரை, வரதப்பா் தெருவைச் சோ்ந்த மன்சூா்அலிகான் (32), இடுக்கடிலாட் தெருவைச் சோ்ந்த சூா்யா (26), கைலாசப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (30) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 60 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.