தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பாலகம் வைக்க உரிமம் பெற்றுத் தருவதாக 11 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ்குமாா் (45), தேவகோட்டை நகா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தேவகோட்டை புதுத் தெருவைச் சோ்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (25), மானாமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மானாமதுரை இந்திரா நகரைச் சோ்ந்த சுந்தரம் மகன் ராமு (46), திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ்பாபு (20) ஆகிய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையிலடைத்தனா்.