தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
பல்பொருள் அங்காடியில் திருட்டு: இரு பெண்கள் கைது
தேனியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிய இரு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே சாம்பல்பட்டியைச் சோ்ந்த ராஜா மனைவி கிருஷ்ணவேணி (50), பழனிச்சாமி மனைவி செல்வி (52). இவா்கள் இருவரும் தேனி அல்லிநகரம், ரத்தினம் நகரில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் பொருள்கள் வாங்குவது போல நடித்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றனா்.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இதை தெரிந்து கொண்ட கடை ஊழியா்கள், பின்தொடா்ந்து சென்று தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் இரு பெண்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களிடமிருந்து கடையில் திருடிய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணவேணி, செல்வி ஆகியோரை கைது செய்தனா்.