அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
போடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அம்மாபட்டி கிராமத்தில் பெட்டிக் கடை வைத்திருக்கும் முத்துமணிகண்டன் (44) என்பவரது கடையில் சோதனை செய்தபோது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.