சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
போலீஸாரை மிரட்டிய ரெளடி கைது
போடியில் போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி இரட்டை வாய்க்கால் அருகே ரோந்து பணியில்
ஈடுபட்டிருந்தனா். அப்போது, காவல் நிலைய ரெளடிகள் பட்டியலில் உள்ள, போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் இளந்தமிழன் (42) அந்த வழியாக வந்தாா். இவா் போலீஸாரைக் கண்டதும் தப்பிக்க முயன்றாா்.
போலீஸாா் இவரை பிடித்து விசாரித்தனா். அப்போது, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாகத் திட்டினாா். மேலும், கத்தியைக் காட்டி வெட்டிக் கொன்று விடுவதாக மிரட்டினாா். இதையடுத்து, போலீஸாா் இளந்தமிழனை கைது செய்தனா்.