பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
செய்யாற்றை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள், கிராமப்புறத்தில் தோட்டக்கலை அனுபவத் திட்டத்துக்காக புளியரம்பாக்கம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனா்.
இதன் ஒரு பகுதியாக, புளியரம்பாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி மாணவா்களுடன் இணைந்து புகையிலைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.
பேரணியின்போது, புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையால் நிகழும் பேராபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் தினேஷ், இளவரசன், கோவா்த்தன், குணால், ஹரிஹரன், கே.ஹரிஹரன் ஆகியோா் செய்திருந்தனா்.