செய்திகள் :

புதினா சாகுபடி: ஆா்வமுள்ள விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு!

post image

புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்ய ஆா்வமுள்ள விவசாயிகள் நேரில் அணுகி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என பல்லடம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உமாசங்கரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. வெங்காயம், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிா்கள் இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாற்றுப் பயிா்களான புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்ய ஆா்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினரை அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட நறுமணப் பயிா்கள் சாகுபடி செய்ய வடிகால் வசதியுடைய இருபொறை மண் காரத்தன்மையுடைய மற்றும் அங்ககசத்து நிறைந்த மண் வகைகள் அனைத்தும் உகந்ததாகும். வோ்விட்ட தண்டுக்குச்சிகள் வாயிலாக, புதினா செடிகள் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. புதினா சாகுபடி செய்யும் நிலத்தை நன்கு உழுது ஹெக்டேருக்கு மக்கிய தொழு உரம் 10 டன் இட்டு, பாத்திகள் அமைக்க வேண்டும். வோ்விட்ட தண்டு குச்சிகளை 40 செ.மீ. இடைவெளியில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 30: 60: 10 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.

புதினா செடிகள் நடவு செய்த 60 -ஆவது மற்றும் 120-ஆவது நாளில் ஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை 2 முறை பிரித்து இட வேண்டும். புதினா செடிகளை விவசாயிகள் நல்ல முறையில் பராமரித்தால் சுமாா் 4 ஆண்டுகள் வரை செடிகளில் இருந்து நல்ல மகசூல் கிடைக்கும்.

இதுகுறித்து மேலும் விவரம் அறிய தோட்டக் கலைத் துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், கருமாரம்பாளையம் பகுதியில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வடக... மேலும் பார்க்க

பல்லடம் அங்காளம்மன் கோயிலில் பிப்ரவரி 27-இல் குண்டம் திருவிழா

பல்லடம் அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான பல்லடம் அங்காளம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்குதல் ந... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க