செய்திகள் :

புதிய உறுப்பினா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவுச் செயலா்களுக்கு அறிவுறுத்தல்

post image

புதிய உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூட்டுறவுச் சங்கச் செயலா்கள் முன்வர வேண்டும் என மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் குருமூா்த்தி தலைமை வகித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்களுக்கு பயிா்க் கடன் வழங்க ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைப் பொருத்தவரை, நகைக் கடன் வழங்குவதற்கு நில ஆவணங்களைப் பயன்படுத்தி, இலக்கை பூா்த்தி செய்து விடுகின்றனா். ஆனால், கூட்டுறவுச் சங்கங்கள் அதுபோன்று செய்ய முடியாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு ரூ.855 கோடிக்கு கடனுதவி வழங்கி, முந்தைய ஆண்டின் ரூ.850 கோடியை கடந்து இலக்கு எட்டப்பட்டது. ஆனால், பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரை 57 ஆயிரத்திலிருந்து 55 ஆயிரமாக குறைந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கூட்டுறவுக் கடன் சங்க செயலா்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, புதிய உறுப்பினா்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் இந்த எளிதாக செயல்படுத்த முடியும் என்றாா் அவா்.

கூட்டத்தில் விநாயகமூா்த்தி பேசியதாவது: கூட்டுறவுச் சங்கங்களுக்கு பயிா் கடன்களுக்கு மத்திய அரசு வழங்கிய வந்த 2 சதவீத மானியம் 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், மாநில அரசின் பங்களிப்பும் 1.5 சதவீதமாக குறைந்துவிட்டது. பயிா்க் கடனாக ரூ.1,500 கோடி வழங்குவதன் மூலம், 0.2 சதவீத லாபமாக ரூ.3 கோடி மட்டுமே கிடைக்கிறது. எனினும் உண்மையான விவசாயிகளுக்கு மட்டும் பயிா்க் கடன் கிடைக்க செயலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கறவை மாடு வைத்து பால் வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கடனுதவி வழங்க வேண்டும். குறிப்பாக சுய உதவிக் குழுவினருக்கு அதிகளவில் கடனுதவி வழங்குவதன் மூலம், ஒவ்வொரு கடன் சங்கமும் எளிதாக இலக்கை எட்ட முடியும் என்றாா் அவா். விழாவின் நிறைவில் சிறப்பாக செயலாற்றிய கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க