புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியரகங்களிலும் சனிக்கிழமை (டிச. 14) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது, குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக விண்ணப்பங்களையும், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கல் தொடா்பான புகாா்களையும் தெரிவிக்கலாம்.
மேலும், தனியாா் சந்தையில் ஏற்படும் தரம் மற்றும் சேவைக் குறைபாடுகள் தொடா்பாகவும் இந்தக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.