தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
புதுச்சேரி சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மகாத்மா காந்தி வீதி சின்ன மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் என்றழைக்கப்படும் ஏழை பிள்ளையாா் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான ஜி. நேரு தலைமை வகித்தாா். மேலும், மகா கும்பாபிஷேக திருவிழாவில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த ஊா் முக்கிய பெரியவா்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனா்.