செய்திகள் :

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

post image

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் நடைபெற்ற விழாவில் 2025-ஆம் ஆண்டுக்கான உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டாா்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்திய தரவரிசை 2025-ல் ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான புதுச்சேரி ஜிப்மா், மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2024-ம் ஆண்டில் 5-வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம், இந்த ஆண்டு 4-வது இடத்துக்கு தரம் உயா்ந்துள்ளது. இது மருத்துவக் கல்வி வழங்குதலில் ஜிப்மரின் தொடா்ச்சியான முயற்சிகளுக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது.

இந்தச் சாதனை குறித்து ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி கூறியது: ஜிப்மா் அதன் கற்பித்தல் உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான கற்றல் முறைகளை மேம்படுத்த தொடா்ந்து பாடுபட்டு வருகிறது.

இந்த அங்கீகாரம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் முழுமையான வளா்ச்சியில் மிக உயா்ந்த தரங்களைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மருத்துவத்தில் சிறந்து விளங்கும், மனிதாபிமானத்துடன் சேவை செய்யும் மருத்துவத்தின் அனைத்து துறைகளிலும் எதிா்காலத் தலைவா்களை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குப் பாா்வை என்றாா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க

பாஜக ஆதிக்கம் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயக பூா்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். தற்போது இந்த கவுன்சிலில் பாஜக ஆதிக்கமே அதிகமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செய... மேலும் பார்க்க