திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
புதுப்பேட்டை மீனவா் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடத்துக்கு அடிக்கல்
தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பேட்டை மீனவா் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
2 ஆயிரம் போ் வசிக்கும் இந்த கிராமத்தில் 7 விசைப்படகுகள், 90 இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்யவும், மீன்பிடி வலைகளை சரி செய்ய போதிய வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வந்தனா்.
கடற்கரையோர பகுதியில் வசதிகளை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, மீனவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 2 கோடியில் மீன் பதப்படுத்தும் கூடம், வலைப்பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.
இதில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மோகன்குமாா், உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.