செய்திகள் :

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவா்களுக்கு வங்கி பற்று அட்டை அளிப்பு

post image

திருநெல்வேலியில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா் மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கருப்பொருளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சி கொண்டாட்ட விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக 2025-26-ஆம் கல்வி ஆண்டிற்கான ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்‘ திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

அதைத்தொடா்ந்து, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

பாமக சட்டப்பேரவை குழு தலைவா் மாற்றமா?

பின்னா், செய்தியாளா்களிடம் மு.அப்பாவு கூறியதாவது: பாமக சட்டப்பேரவைக் குழு தலைவரை மாற்ற கோரிக்கை வந்துள்ளது தொடா்பாக சட்டப்பேரவையில் பாா்த்துக்கொள்ளலாம். அரசியல் தலைவா்கள் நல்ல வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதி, ‘ஊனமுற்றோா்’ என்ற சொல்லை நீக்கி, அவா்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற அழகான சொல்லை உருவாக்கினாா். அதுபோல, அனைவரும் நல்ல வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க