செய்திகள் :

‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் 3,842 மாணவிகள் பயன்!

post image

திருச்சியில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டதன்மூலம் மாவட்டத்தில் 3,842 மாணவிகள் பயன்பெறுவா் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை, தூத்துக்குடியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கி பேசியது:

இத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில், இதுவரை 7,334 மாணவிகளும் மேலும், முதலாமாண்டு கல்லூரியில் சோ்ந்துள்ள 4,005 மாணவிகளும் பயன்பெற்று வந்தனா். இப்போது, விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் மூலம், 3,842 மாணவிகள் பயன் பெறுவா் என்றாா் அவா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் கே. அருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அ. செளந்திர பாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, ப. அப்துல்சமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி வழியாக இயக்கப்படும் குளிா்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

குளிா்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு: திருச்சியில் இரு... மேலும் பார்க்க

முசிறி அருகே மணல் கடத்திய இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் காவிரிப் பகுதியில் மணல் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேர... மேலும் பார்க்க

அசுத்த இடங்களை அழகுபடுத்தும் மாநகராட்சி!

திருச்சி மாநகரில் குப்பைகள் தேங்கிய இடங்களைக் கண்டறிந்து அழகுபடுத்தும் முயற்சியை திருச்சி மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி மாநகரில் குடியிருப்புகளிலும் சிறிய தெருக்களின் சந்திப்புப் பகுதிகளி... மேலும் பார்க்க

ஜன.4 இல் தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழா

திருச்சியில் வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுச் செயலா் எஸ். புஷ்பவனம் கூறியது: திருச்சி ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலைய அஞ்சலகம் இடமாற்றம்

திருச்சி விமான நிலையத்தில் இயங்கி வந்த அஞ்சலகம் காவேரி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் நா. பிரகாஷ் கூறுகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளின் போட்டியால் விபத்து: சமையல் ஒப்பந்ததாரா் சாவு

திருச்சியில் புதன்கிழமை அதிகாலை தனியாா் பேருந்துகளில் போட்டியால் நடந்த விபத்தில் சமையல் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா். திருச்சி பொன்மலை அடிவாரம், அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நிக்கோ அருண் தாமஸ் ... மேலும் பார்க்க